Thursday, November 13, 2008

நானும் - மின்சார ரயில் பயணமும்

நான் மின்சார தினமும் பார்க்கும் சில காட்சிகள்
இது கதையும் இல்லை, கவிதையும் இல்லை ...

நான் போகும் மின்சார ரயிலில் தான் எத்தனை விதமான மனிதர்கள்
அவ்வளவு கூட்டத்திலும் தனக்கென்று ஒரு அடையாளம் தேடும் மனிதர்கள்
ஒரு மாலை வேளையில், நான் கவனித்த சிலர் பற்றி ஒரு தொகுப்பு

பயணம் செய்யும் நேரம் வீணடிக்காமல் செய்தித்தாள் படிக்கும் சிலர்
நேரம் வீணானாலும் ஆகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் சிலர்
கல்லூரியில் நடந்த சண்டையை பற்றி தோழிகளுடன் பேசும் சிலர்
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சிலர்

உள்ளே இடம் இருந்தும் கதவு அருகே தொங்கும் சிலர்
தன்னிடம் இருக்கும் கைபேசியில் ஊரறிய கத்தும் சிலர்
"இன்று இரவு வீட்டில் என்ன சமையல்" என யோசிக்கும் சிலர்
தன் குழந்தை பள்ளி முடிந்து வீடு வந்து விட்டதா என கவலையோடு சிலர்

நாளை எப்படி இருக்கும் என கவலையோடு போகும் தின கூலிகள் சிலர்
தன்னிடம் உள்ள "சமோசா"வினை கூவி கூவி விற்கும் சிலர்
"அந்த காலத்துல ..." என்று தொடங்கி பழங்கதை பேசும் சிலர்
பெண்களை பார்த்து "சைட்" அடிப்பதற்கென்றே வரும் சிலர்

இவற்றை தவிர, நான் கவனித்த சில விஷயங்கள்
* ரயிலில் இருக்கும் மின் விசிறி சுற்றாவிட்டால், தன் பேனா அல்லது தன் சீப்பால் அதை சுழற்ற முயற்சி செய்து, முடிவில் நொந்து போகும் "ஆபிசர்கள்"
* ரயிலில் இருக்கும் அந்த மின் விளக்கை கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு நம்பிக்கை மக்கள் மீது !
* சில தாத்தாகளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இருக்குற வயசுலே சும்மா இல்லாம கதவு கிட்டே நிக்க வேண்டியது. ஒரு பொண்ணு, அவரோட பேத்தி வயசுலே இருந்தாலும், பார்த்தவுடன், சீப்பை எடுத்து தலையை சீவ வேண்டியது (தலையில் முடி இருக்காது- அது வேறு விஷயம்) ... என்ன கொடுமை சார் இது?

8 comments:

  1. your tamil writing is good...keep them coming
    உங்களுக்கு மதுரைக்கு பக்கமா ....ஹி ஹி

    -Sam

    ReplyDelete
  2. மின்சார ரயில் பயணம் மிகவும் இனிமையானது ... ! தங்களது சிந்தனை அருமை அதிலும் "பார்த்தவுடன், சீப்பை எடுத்து தலையை சீவ வேண்டியது மிக அருமை"...!!!
    ஆனால் "இன்று இரவு வீட்டில் என்ன சமையல்" என யோசிக்கும் சிலரை தாங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் !!!!!!

    நான் "நேரம் வீணானாலும் ஆகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் சிலர்" வகையை சேர்ந்தவன் ஆனால் ஒரு சிறு திருத்தம் .. நான் மிகவும் யோசிக்கும் நேரங்களில் அதுவும் ஒன்று மற்றும் அது என்னுள் ஒரு நல்ல விதமான மாற்றத்தை ஏற்படுத்தும்..


    சென்னை வாசியாக இருந்துகொண்டு தாங்கள் மிக அருமையாக தமிழில் எழுதியுள்ளீர்கள் .... நான் உங்களை பாராட்டுகிறேன் !!!!!!!!!!!

    ReplyDelete
  3. Thanks for your comments and compliments.
    Sam, some friends who don't know how to read Tamil have complained about this blog. So, I shall get back to english and write Tamil blogs on and off. And why "madurai"?
    Jegu, I can find out about "thinking about dinner" when they buy vegetables in the train!

    ReplyDelete
  4. may be if you write it in chennai's slang may be they will like it.... :)

    ReplyDelete
  5. hi,your nanum ----payanamum reminds me of my olden days when we use to travel to college from cpt to guindy.I have watched all these things and enjoyed most of them.But I cant agree with what u said abt fans. Think you haven't seen people stealing bulbs,without knowing that it won't work at home.

    ReplyDelete
  6. Jegu, I seriously think that it is difficult to blog in "Chennai Tamil". I mean, "inna me, nalla thunniya" doesnt look nice!
    Geetha mami, thanks for ur comments! :)

    ReplyDelete
  7. Supera iruku...it was a nice read!

    ReplyDelete
  8. Hey Prabha,

    very niceeeeeeeeee........came across your blog only today..........it's really good.....keep it up.........

    ReplyDelete