Tuesday, July 14, 2009

தொடர் / சங்கிலி பதிவு

என் நண்பர் சாம் எழுதிய பதிவு http://samuel-sammy.blogspot.com/2009/07/blog-post.html
அதன் தொடர் இதோ ...

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் பெயர் மிகவும் பிடிக்கும். பெயர் காரணம் ... நான் பிறந்தது மாலை வேளையில். அப்போது சூரியனின் கதிர்கள் மிகவும் அழகாக இருக்கும்.பிரபா என்றால் சூரியனின் கதிர்கள் (அல்லது ஒளி ) என்று பொருள். இது அம்மா எனக்கு சொன்னது.

என் கணவரின் பெயரும் என் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால், இன்னும் பிடித்து போனது ! (அவர் பெயர் பிரபாகர்)

2.கடைசியாக அழுதது எப்போது..?
முன்பெல்லாம் ரொம்ப எளிதாக அழுபவள் , ஆனால் இப்போது மிகவும் குறைந்து விட்டது. கடைசியாக அழுதது ... நினைவில்லை

3.உங்களோட கையெழுத்து உஙகளுக்குப் பிடிக்குமா?
ஓரளவுக்கு

4.பிடித்த மதிய உணவு ?
சப்பாத்தி

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அவர்கள் என்னுடன் பழகும் விதத்தை பொறுத்தது .

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
இரண்டும் பிடிக்காது

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?
கண்கள். அதிலிருந்து அவர்களின் எண்ணம் ஓரளவிற்கு தெரிந்துவிடும்


8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்... எப்போவும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்வேன்
பிடிக்காத விஷயம்..ரொம்ப ஓவர் மொக்கை போடுவது


9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்தது, என்னிடம் அவர் பழகும் விதம். பிடிக்காதது என்று ஏதும் இல்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
சில நண்பர்கள்.


11.இதை எழுதும்போது என்ன வர்ணn உடை அணிந்துள்ளீர்கள்?
நீலம்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?
ஒன்றும் இல்லை

13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
மஞ்சள்

14.பிடித்த மணம்? petrol, மல்லிகை, மழை, ரோஜா, என்று நிறையா ...

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?


அவர் எழுதும் விதம். பதிவுகள் மிகவும் அறிவுபூர்வமாக இருப்பதை விட, சாதாரணமாய், ஒருவர் வாழ்க்கையில் நடப்பது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி இருந்தால் பிடிக்கும். அதாவது, யதார்த்தம்.

மற்றபடி, கவிதை / கட்டுரைகளில் நாட்டம் இல்லை.

பிடித்த பதிவுகள் - விக்கி, சாம், ஜக்கு, ஜெயா, பெட்சி போன்றவர்கள்.


16. பிடித்த விளையாட்டு?...
கிரிக்கெட்

17. கண்ணாடி அணிபவரா?
இல்லை. contact lens.

18.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?...
குறிப்பாக ஒன்றும் இல்லை. கமல் ரசிகை.

19.கடைசியாக பார்த்த படம்?
மாசிலாமணி என்ற தலைவலி.

20.பிடித்த பருவ காலம் ?...
குறிப்பாக ஒன்றும் இல்லை

21.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் தான் படிப்பேன்.

22.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்ற மாட்டேன். இப்போ இருப்பது ஒரு திருமணத்தில் எங்கள் இருவரை எடுத்த படம்.

23.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்.... இசை...ஏதாவது ஒரு தாளம்... மேஜையில் அடிக்கடி தாளம் போடுவேன்.
பிடிக்காத சத்தம்..ஹோர்ன்

24. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
அமெரிக்கா

25.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
சுமாராக பாடுவேன் ஆடுவேன்
நன்றாக சமைப்பேன்
மிக நன்றாக பேசுவேன் (சரி... இது கொஞ்சம் ஓவர்!!)

26.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?
பல விஷயங்கள் ... வாழ்கையை பற்றி

27. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம் அதிகம்

28.உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
venice

29.எப்படிஇருக்கணும்னு ஆசை ??.
இப்படியே!

30. கணவன் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அப்படி குறிப்பிட்டு ஒன்றும் இல்லை...அவர் இல்லாமல் இருப்பதற்கு விருப்பம் இல்லை.

31. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
வாழ்க்கை ராட்டினம் தான் டா
தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ
காட்டுது தோடா.

இந்த "அஞ்சல" பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்

6 comments:

 1. /****பிடித்த மணம்? petrol, ***/
  அருமையான ரசனை.. !!!

  //*** பிடித்த மதிய உணவு ? சப்பாத்தி ***/
  ஆத்துல போய் தோச வாத்து சாப்பிட புடிகும்னுல நெனச்சேன்!!! :)))

  பதிவகம் ரொம்ப அருமை ...

  ReplyDelete
 2. Hey Prabs,
  Really nice one...
  Reminds me of all that you are...

  ReplyDelete
 3. prabha.. your tamil writing is too good, hardly any spelling mistake, hope you write more tamil blogs.

  i repeat this question to you, since you wrote 4 lines

  வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?

  ReplyDelete
 4. Thanks for the compliment Sam. The only problem with Tamil blogs is some of regular blog readers ask for a translation. But while translating, the "feel" is lost! Also, Tamil typing is slow, which sometimes affects the "flow" of thoughts!

  One line?... Vaazhkai Oru Puthir. :)

  ReplyDelete
 5. create a separate link for tamil and write there...you can circulate to your tamil friends alone.

  ReplyDelete